இஸ்ரேலில் அல்லாஹு அக்பர் என்றால் நாய் கடிக்கும்

18.01.2010

அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்று முஸ்லிம்கள் சொல்வதைக் கேட்டால் அவர்களை தாக்கி கடிக்கும் விதத்தில் இஸ்ரேல் ராணுவம் நாய்களுக்கு பயிற்சி அளித்துவருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்தகைய நடவடிக்கையை வெளிக்கொணர்ந்தது இஸ்ரேல் ரேடியோவின் ராணுவச் செய்தியாளர் கார்மேல மினாஷை என்பவர்.

அரப் மூவ்மெண்ட் ஃபார் ரினீவல் பார்டியின் தலைவரும் இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினருமான அஹ்மத் திபி பாராளுமன்றக் கூட்டத்தின் போது இதனைக் குறித்து கேள்வியெழுப்பினார். இத்தகையதொரு பயிற்சி நாய்களுக்கு அளிக்கப்படுகிறதா என்பதைக் குறித்து தெளிவுப்படுத்த வேண்டுமென்றும் அல்லாஹு அக்பர் என்று கூறுவது உங்களை ஏன் பீதியடையச்செய்கிறது என்றும் திபி இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

அல்லாஹு அக்பர் என்ற வசனத்தை கேட்டு நீங்கள் பயப்படுகின்றீர்களா. நான் உங்கள் அனைவரிடமும் கூறுகிறேன், இறைவன்மிகப் பெரியவன், இங்கு என்னை கடிக்க ஏதேனும் நாய்கள் உண்டா, இவ்வாறு அவர் கூறினார்.

World News

Tags : Adiyakkamangalam - World News Online Tamil Video Classifieds Cook Book Blog Portal Samayal Daily Seithi Science Adiyarkai Adiyarkkai Tiruvarur Thiruvarur