மோசமான ஏர்போர்ட் பட்டியலில் இந்திய விமான நிலையங்கள்

25.01.2010

உலகிலேயே மிக மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் முதல் 5 இடத்தை டெல்லி, மும்பை, சென்னை விமான நிலையங்கள் பெற்றுள்ளன. விமானங்கள் குறித்த நேரத்துக்கு வந்து சேருதல் மற்றும் சரியான நேரத்துக்கு புறப்பட்டு செல்லுதல் அடிப்படையில் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் மிக அதிகமான விமானங்கள் தாமதமாக புறப்படும் மற்றும் வந்து சேரும் மோசமான விமான நிலையங்கள் பட்டியலை அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 2ம் இடத்தை டெல்லி விமான நிலையம் பிடித்துள்ளது. அங்கு 45 சதவீத விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் புறப்படுகின்றன. 3வது இடத்தை பிடித்துள்ள மும்பை விமான நிலையத்தில் இருந்து 56 சதவீத விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் புறப்பட்டு செல்கின்றன. இதில், 4வது இடத்தை பிடித்திருப்பது சென்னை விமான நிலையம். இங்கு 63.9 சதவீத விமானங்கள் மட்டுமே சரியான நேரத்துக்கு வருவதாக போர்ப்ஸ் தெரிவிக்கிறது.

World News

Tags : Adiyakkamangalam - World News Online Tamil Video Classifieds Cook Book Blog Portal Samayal Daily Seithi Science Adiyarkai Adiyarkkai Tiruvarur Thiruvarur