மலிவு விலை கணினி - இண்டெல் தயாரிக்கிறது
29.01.2010
அமெரிக்காவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான இண்டெல் நிறுவனம் மலிவு விலை கணினி தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், விலை குறைவாகவும் அதே சமயத்தில் குறைவான பராமரிப்புடைய கணினியை தயாரிக்கவும் இண்டெல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக அதன் நிர்வாகி அஜய் பட் தெரிவித்துள்ளார்.
இண்டெல் கணினிகளை வைரஸ் தாக்காத அளவுக்கு அதன் வடிவம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் விற்பனையாகும் கணினிகளில், 90% கணினிகள் இண்டெல் வகை ப்ராஸசர்களையே பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.