சூரியஒளியில் சக்தியை சேமிக்கும் மின்கலம்

07.02.2010

எலக்ட்ரானிக் சாதன்ங்களை இயக்க பயன்படும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் அதற்கு மின்சாரம் வேண்டும் ஆனால் இனி பேட்டரிகளுக்கு மின்சாரம் தேவைப்படாது. சூரிய ஒளியில் வைத்தாலே பேட்டரிகள் தானாக “சார்ஜ்” ஆகிவிடும்.

இதற்கான கருவியை அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.மனிதனின் மூளை செயல்பாட்டை மையமாக வைத்து இந்த கருவியை உருவாக்கி உள்ளனர். மனித மூளை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மனிதன் சூரிய ஒளியில் நிற்கும்போது மூளையில் மின் உற்பத்தி செய்யும் பகுதி தானாக சார்ஜ் ஆகிவிடும்.

இதே முறையில்தான் இந்த கருவியையும் கண்டுபிடித்து உள்ளனர். சூரிய ஒளியில் போட்டோ பைலட் சாதனத்தை வைத்து அதன் மூலம் பெறும் சூரிய ஒளி சக்தியாக மாறப்பட்டு கருவிக்குள் அனுப்பி பேட்டரியை சார்ஜ் செய்கிறது. இந்த கண்டுபிடிப்பு மூலம் எதிர்காலத்தில் மின் சக்தி துறையில் புதிய புரட்சி ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

World News

Tags : Adiyakkamangalam - World News Online Tamil Video Classifieds Cook Book Blog Portal Samayal Daily Seithi Science Adiyarkai Adiyarkkai Tiruvarur Thiruvarur