வீட்டில் 24 முதலைகளை வளர்க்கும் பிரிட்டிஷ்காரர்

04.02.2010

இங்கிலாந்து நாட்டின் முதல் முதலைப்பண்ணை ஆக்ஸ்போர்டு நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் வீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் பெயர் ஷான் போகெட். 30 வயதான இவர் தன் வீட்டின் பின்னால் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியை கட்டி இருக்கிறார். இது ஒரு குளம் மாதிரி இருக்கும்.

இதில் ரூ.50 லட்சம் செலவில் 24 முதலைகளை வளர்த்து வருகிறார். இந்த முதலைகளின் உணவுக்காக அவர் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் செலவிடுகிறார். நான் குழந்தையாக இருந்தது முதல் எனக்கு முதலைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். என் குழந்தைகளும் இந்த முதலைகளுடன் வளர்ந்ததால், அவர்களுக்கு முதலைகளை பார்த்து பயம் கிடையாது என்கிறார்.

World News

Tags : Adiyakkamangalam - World News Online Tamil Video Classifieds Cook Book Blog Portal Samayal Daily Seithi Science Adiyarkai Adiyarkkai Tiruvarur Thiruvarur