ஜப்பானின் புதிய கண்டுப்பிடிப்பாக எலாஸ்டிக் வாட்டர்

02.03.2010

தண்ணீரை இப்படியும் பயன்படுத்த முடியுமா என்று வியக்க வைத்துள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள். நெகிழா தன்மை கொண்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தண்ணீரையே பிளாஸ்டிக்காக பயன்படுத்த வழி கண்டு உள்ளார்கள் இவர்கள். மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியாததால் பிளாஸ்டிக் கழிவுகள், சமுக வாழ்வுக்கு ஒரு பெரும் சவாலாகவும், தொல்லையாகவும் இருந்து வருகிறது. இதனால் கணிசமான அளவில் புவி சூடாகி இருப்பது மறுக்க முடியாத உண்மை.

டோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ள இந்த எலாஸ்டிக் வாட்டர் (Elastic Water) நெகிழும் தண்ணீர் பிளாஸ்டிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. 95 சதவீதம் தண்ணீரும், 2 கிராம் களிமண் மற்றும் ஒரு சில ரசாயனங்களும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. ஒளி ஊடுருவும் தன்மை, நெகிழும் தன்மை, மீள் தன்மை கொண்டதாக இருப்பதால் மறுசுழற்சி செய்ய முடியும். சுற்றுச் சூழலுக்கும் தீங்கற்றது.

மருத்துவத்துறையிலும் இந்த எலாஸ்டிக் வாட்டர் பயன்படும் என்பதுதான் இதன் மற்றொரு சிறப்பம்சம். குறிப்பாக காயம் பட்ட இடங்கள், அறுவைச் சிகிச்சைப் பகுதியில் வெட்டப்படும் மேற்தோல், தசைப் பகுதியை உலராமல் பாதுகாப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. மருத்துவத்திலும், சுற்றுப்புறச் சூழலிலும் பெரிதும் துணைபுரியும் எலாஸ்டிக் வாட்டர் சமீபத்திய சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

World News

Tags : Adiyakkamangalam - Japanese Scientists invented Elastic Water paving the way for ecologically clean plastic materials