உணவைப் பகிரும் மனிதக் குரங்கு வகை

09.03.2010

போனபோ வகை மனிதக் குரங்குகள், தாமாகவே முன்வந்து உணவைப் பகிர்ந்து கொள்வதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக, விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கரண்ட் பயோலஜி என்ற பத்திரிக்கையில் பிரசுரமாகியிருக்கும் ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், இந்த வகை மனிதக்குரங்குகளை ஒரு அறைக்குள் உணவுடன் வைத்திருந்தது பற்றி ஆராய்ச்சியாஅளர்கள் குறிப்பிடுகையில், அந்த உணவை அவை உடனடியாக சாப்பிடலாம், அல்லது ஒரு கதவைத் திறந்து மற்றுமொரு போனபோ மனிதக் குரங்கை உள்ளே அனுமதித்து தன்னுடன் அந்த உணவை உண்ணுமாறும் செய்யலாம் என்ற வகையில் அமைத்திருந்ததாகக் கூறினார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், போனபோக் குரங்குகள் கதவைத் திறந்து உணவை பகிர்ந்துகொள்ளும் வழிமுறையினையே தேர்ந்தெடுத்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தன்னலமற்ற செய்கை போல் தோன்றும் இந்த செய்கையின் பின்னால் உள்ள காரணம் குறித்து அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

World News

Tags : Adiyakkamangalam - Bonobo is mentally fit to share food