சமையல் / சோறு வகை

நெய் சோறு

 (அடியக்கமங்கலம், அசைவம்)
தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி - 3 கப்
பெரிய வெங்காயம் - 2
தயிர் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
நெய் - கால் கப்
எண்ணெய் - கால் கப்
கொத்தமல்லி - 2 கொத்து
கிராம்பு - 5
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 6 கப்

கொத்தமல்லித் தழையை காம்புகள் நீக்கி, கழுவி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

எலக்ட்ரிக் குக்கரில் செய்வதாக இருந்தால், உள்ளே வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதனை நேரிடையாக அடுப்பில் வைக்கவும். அதில் கால் கப் எண்ணெய், கால் கப் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். நெய்யின் அளவை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம்.

அதில் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு சுமார் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

இப்போது அதில் தயிர் ஊற்றவும். முதலில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.

அத்துடன் கொத்தமல்லி தழையைப் போட்டு ஒரு முறை கிளறி விடவும்.

பின்னர் அதில் 6 கப் தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.

பாத்திரத்தை மூடிவைத்து, அடுப்பிலேயே வேக வைக்கவும். எலக்ட்ரிக் குக்கரில் இப்போது வைக்க வேண்டாம்.

சுமார் 5 நிமிடம் கழித்து அரிசியை போட்டு கிளறி விட்டு வேகவிடவும். மீதமுள்ள ஒரு தேக்கரண்டி உப்பினையும் சேர்த்துக் கிளறவும்.

3 நிமிடம் கழித்து இறக்கி எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விடவும். சாதாரண குக்கரில் செய்பவர்கள் அப்படியே தொடர்ந்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கலாம். சாதம் குழைந்துவிடக் கூடாது.

இறக்கியவுடன் சாதத்தில் பிரியாணிக்கு சேர்க்கும் வண்ணப் பொடியை கரைத்து ஊற்றி கிளறிக் கொள்ளவும். மிகவும் குறைவாக சேர்க்கவும். நெய் சோறு பாதி வெண்மை நிறமாகவும், பாதி மிதமான வண்ணமாகவும் இருக்க வேண்டும். தேவையெனில் சிறிது நெய்யினை ஊற்றிக் கிளறிக் கொள்ளலாம்.

USA Boats


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed