சமையல் / இனிப்பு வகை

களி உருண்டை (Kali Urundai)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - சிறிதளவு

செய்முறை:

அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இதில் பொடித்த அரிசியை சிறிது சிறிதாக கொட்டி கட்டி பிடிக்காமல் கிளறிவிடவும். அரிசி வெந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து கிளறி விடவும்.

வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடியை அதில் போடவும். இந்த கலவை சட்டியில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும். சிறிது சூடாக இருக்கும்போதே உருண்டை பிடித்து தேங்காய் துருவலில் உருண்டையின் அனைத்து பாகங்களிலும் படுமாறு பிறட்டி எடுத்து தனியாக ஆற வைத்து சுவைக்கலாம்.

நன்றி: பாத்திமா, அடியக்கமங்கலம்.

Chennai Baby Items


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed