சமையல் / இனிப்பு வகை |
|
ரவா கேசரி (Rava Kesari)
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள்:
ரவை - 2 கோப்பை
சர்க்கரை - 1 1/2 கோப்பை
நெய் - 50 கிராம்
ஏலக்காய் - 5 (பொடியாக)
முந்திரி - 10
திராட்சை - 10
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை:
ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 5 கோப்பை தண்ணீர் விட்டு(ஒரு மடங்கு ரவைக்கு 2 1/2 மடங்கு தண்ணீர்), அதில் கேசரி பவுடர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும். பிறகு இதில் வறுத்த ரவையை கொட்டி கிளறி விடவும்.
ரவை வெந்தவுடன் சர்க்கரையை கொட்டி பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும். பின்னர் 2 ஸ்பூன் நெய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். இக்கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி விருப்பமான வடிவில் வெட்டி வைத்து சுவைக்கலாம்.
ரவா கேசரி செய்யும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
நன்றி: இர்ஷாத், அடியற்கை.