சமையல் / இனிப்பு வகை

பொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

உடைத்த பொட்டுக்கடலை - 200 கிராம்
நாட்டு வெல்லம் - 200 கிராம்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

பொட்டுக்கடலையை நெய் விட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். இதில் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

சர்க்கரை அல்லது வெல்லம் கரைந்து பாகு பதம் (கம்பி பதமாக) வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

பிறகு வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலையைச் சேர்த்துக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.

கைப்பொறுக்கும் அளவு சூடாக இருக்கும் போதே பொட்டுக்கடலையை தேவையான அளவு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டையில் ஆற வைத்து சுவைக்கலாம்.

கவனிக்க:

கம்பி பதம் என்பது சர்க்கரை கரைந்து நன்றாக கொதித்து பாகு ஆனதும் கையில் எடுத்து இரு விரலில் அழுத்தி எடுத்தால் கம்பி மாதிரி நீண்டு வரும். பாகில் போடப்பட்ட பொட்டுக்கடலை சூடு ஆறி விட்டால் உருண்டை பிடிக்க முடியாத அளவிற்கு இறுகி விடும். பொட்டுக்கடலைக்கு பதில் உடைத்த நிலக்கடலை வைத்து செய்தால் கடலை உருண்டைக் கிடைக்கும்.

Mumbai Books


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed