சமையல் / காரம் வகை |
|
வாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/4 கிலோ
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வாழைக்காய் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.
வாழைக்காயை சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வாழைக்காயை, ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.
பஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.
கவனிக்க வேண்டியவை:
கேரட், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரிக்காய், சௌசௌ என அனைத்து காய்களிலும் பஜ்ஜி செய்யலாம். மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும். பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.