சமையல் / காரம் வகை

கருப்பு கொண்டை கடலை சுண்டல்

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டை கடலை - ஒரு கப்
துருவிய தேங்காய் - கால் கப்
சின்ன வெங்காயம் - முன்று
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
சர்க்கரை - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லித்தழை - 1 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டை கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற போட வேண்டும். காலையில் கடலையை நன்கு களைந்து தண்ணீரை வடிக்கவும்.

பிறகு கடலையை குக்கரில் போட்டு முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நான்கு ஐந்து விசில் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும், கொண்டை கடலையை தண்ணீர் வடித்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து, நன்கு கிளறி கடைசியாக கறிவேப்பிலையையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதில் வடித்து வைத்துள்ள வேக வைத்த கடலையை அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கிளறி இரண்டு நிமிடம் அடுப்பில் வேக வைத்து இறக்கவும். கடைசியாக கொத்துமல்லித் தழை தூவி சாப்பிடவும்.

கவனிக்க வேண்டியவை:

கொண்டை கடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பருப்பு வகைகளில் நிறைய புரோட்டீன் உள்ளதால் வாரம் இருமுறை சாப்பிடுவது நல்லது. குழதைகளுக்கு காரம் கொஞ்சம் குறைத்து கொள்ளவும்.

Malaysian Vehicles And Parts


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed