சமையல் / காரம் வகை

வாழைப்பூ பக்கோடா (Banana Flower Bakoda)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 2 கோப்பை
மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
எண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

கவனிக்க வேண்டியவை:

வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.

American Jobs


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed