சமையல் / காரம் வகை |
|
நிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள்
வறுக்காத நிலக்கடலை - 200 கிராம்
அரிசி மாவு - 1/4 கோப்பை
கடலை மாவு - 1 1/2 கோப்பை
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல்நீக்கி கழுவி தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் தெளித்து நிலக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், கலந்து வைத்த நிலக்கடலை கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். மிதமான சூட்டில் வறுத்து எடுத்தால் தான் நிலக்கடலை கருகாது.