சமையல் / குழம்பு வகை

சாம்பார்

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையானப் பொருட்கள் :

வேக வைத்து கொள்ளவும்

துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
தாளிக்க


எண்ணை - முன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - முன்று பல்லு( தட்டியது)
கருவேப்பிலை - முன்று மேசை கரண்டி ( இரண்டாக கிள்ளிவைக்கவும்)
தளிப்பில் வதக்கி வேகவைக்க

சாம்பார் வெங்காயம் - பத்து (அ) பெரிய வெங்காயம் எட்டாக அரிந்து கொள்ளவும்.
தக்காளி - இரண்டு (இரண்டையும் ஆறு ஆறு துண்டுகளா பொடவும்)
முருங்கக்காய் - ஒன்று( இரண்டு அங்குலம் அளவு அரிந்து கொள்ளவும்)
கேரட் - ஒன்று (வட்டமாக அரிந்து கொள்ளவும்)
பச்சமிளகாய் - இரண்டு
உப்பு - தேவைக்கு
சாம்பார் பொடி - இரண்டாறை தேக்கரண்டி
புளி - சிறிய கொட்ட பாக்கு அளவு(கரைத்து கொள்ளவும்)
வெல்லம் - கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - கொஞ்சம்
நெய் - அரை தேக்கரண்டி

செய்முறை
குக்கரில் பருப்பை கலைந்து நெயில் வதக்கி சீரகம்,மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணையை காய வைத்து கடுகு,சீரகம்,பூண்டு,கருவேப்பிளை போட்டு தாளித்து (சின்ன வெங்காயம் நான்காக அர்ந்து கொள்ளவும் (அ) பெரியவெங்காயத்தை எட்டாக அரிந்து ,தக்காளி,காய்கள்,பச்ச மிளகாய்,உப்பு,ஒரு சிறிய துண்டு முருங்கக்காயை ஏடுத்து நீளவாக்கில் நான்காக அரிந்து போடவும் அப்பதான் வாசனை கும்முன்னு இர்க்கும்.
எல்லவற்றையும் வதக்கி சாம்பார் பொடியும் போட்டு, தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றி சிம்மில் வேகவைக்கவும்.
காய் வெந்தாதும் புளிய அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி மேலும் புளி வாடை போகும் வரை கொதிக்க விட்டு மசித்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் வெல்லம்,நெய்,கொத்து மல்லி சேர்த்து இரக்கவும்.


Mumbai Jewelry And Watches


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed