சமையல் / சோறு வகை

மஸ்கா ரைஸ் (Maska Rice)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையானவை: (நான்கு பேருக்கு)

பச்சரிசி - 3 கப்
நெய் - அரை கப்
கேரட் - 1
பச்சைப் பட்டானி - 100 கிராம் (ஊரவைத்தது)
மல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பட்டை மற்றும் ஏலக்காய் - அரைத் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
முந்திரி - 5
பாதாம் - 5

செய்முறை:

அரிசியை அரை வேக்காட்டில் சமைத்து தனியாக எடுத்து வைக்கவும். முந்திரியையும் பாதாமையும் சேர்த்து மைபோல் அரைத்தது வைத்துக் கொள்ளவும்

சமைத்த சொறு கொள்ளுமளவுக்கு ஒரு வானலியில் அல்லது பாத்திரத்தில் நெய்யை ஊற்றி பதமான சூட்டில் நறுக்கிய வெங்காயத்தையும், கேரட்டையும் போட்டு வதக்கவும், தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியப்பின்னர் அதில் அரைத்த முந்திரி மற்றும் பாதாம் கலவையையும் மல்லித் தழையை அதனுடன் சேர்த்துக் கிளரவும். பின்னர் பட்டை ஏலக்காய் தூளை தூவிவிடவும். சமைத்த சோற்றை அதில் போட்டு கிளரவும். ஊறவைத்த பச்சைப் பட்டாணியை அதில் போட்டு கிளரிவிட்டு, பின்னர் அடுப்பை குறைத்து விட்டு சுமார் 10 நிமிடம் தம்மில் போடவும்.

குறிப்பு:

இதற்கு கொத்துமல்லி, சிறிது புளி, ஒரு பச்சை மிளகாய், சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து துவையல் செய்து அதனுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

நன்றி: பிர்தொளஸ், தேரா, துபை

Kolkata Cameras And Photo


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed