சமையல் / சோறு வகை

மாதுளை தயிர்சாதம்

 (அடியக்கமங்கலம், சைவம்)
தயிர் சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். குறிப்பாக கோடையில் தயிர் சாதம் அதிகம் சாப்பிட்டால், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் தயிர் செரிமானத்தை அதிகரிப்பதோடு, வாயுத் தொல்லையை நீக்கும். மாதுளையை வைத்து செய்யக்கூடிய மாதுளை தயிர் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
தயிர் - 1 கப்
பால் - 1 1/2 கப்
மாதுளை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி நன்கு கழுவி நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியையும் போட்டு, தீயை குறைவாக வைத்து சோறு போன்று நன்கு வேக வைக்க வேண்டும்.

பின்பு அதனை இறக்கி லேசாக குளிர வைத்து, பிறகு அதில் தயிர், உப்பு, மாதுளை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.

Dubai Music


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed