சமையல் / சிற்றுண்டி வகை

கல் தோசை

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

பச்சரிசி- ஒரு கோப்பை
புழுங்கலரிசி-ஒரு கோப்பை
உளுந்து- ஒரு கோப்பை
வெந்தயம்-ஒரு தேக்கரண்டி
உப்பு-ஒரு தேக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை :

மேற்கூறியுள்ள பொருட்களில் உப்பைத்தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாளன்று அவைகளை மைய்ய அரைக்கவும்.
பிறகு அதில் உப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும் புளிக்கவைக்க வேண்டிய அவசியமில்லை.
தோசைக் கல்லில் எண்ணெயைத் தடவி மிதமான அனலில் காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை வார்த்து மூடிபோட்டு வேகவிடவும்.
தோசை முழுவதும் வெந்ததும், திருப்பி போடாமல் அப்படியே எடுத்துவிடவும்.
இந்த சுவையான தோசைக்கு காரக் குழம்பு அல்லது கார சட்னி பொருத்தமாக இருக்கும்.


Mumbai Games


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed