சமையல் / சிற்றுண்டி வகை

வாழைப்பழ ரவை தோசை

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - 2 (நன்கு கனிந்தது)
ரவை - 11/4 கப்
மா (மைதா/கோதுமை) - 1/4 கப்
சீனி - 4 மேசைக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை
நெய் - சிறிது

செய்முறை :

ரவையினுள் தண்னீர் ஊற்றி 10 - 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர் அதனுள் வாழப்பழத்தை சேர்த்து பிசைந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பின்னர் அதனுள் சீனி, உப்பு, மா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து 30 - 45 நிமிடங்கள் வைக்கவும்.
பின்னர் தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து திருப்பி போட்டு நெய் சிறிது ஊற்றி முறுக சுட்டு எடுக்கவும்.
சுவையான வாழைப்பழ ரவை தோசை தயார். இதனை பீநட் பட்டர் அல்லது குழம்பு, சம்பலுடன் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

Abu Dhabi Electronics


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed