சமையல் / சோறு வகை

மட்டன் பிரியாணி (மஜ்கோஸ்)

 (அடியக்கமங்கலம், அசைவம்)
தேவையானப் பொருட்கள்

மட்டன் - முக்கால் கிலோ
பிரியாணி அரிசி - ஒரு கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
எண்ணெய் - 400 மி.லி.
ஏலக்காய் - 5
கிராம்பு - 7
பட்டை - ஒரு அங்குலத் துண்டு
பெரிய வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - 8
புதினா, மல்லி - ஒரு கப்
எலுமிச்சம்பழம் - 2
தயிர் - ஒரு கப்
கறி மசாலா - 5 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
டால்டா - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் இஞ்சியையும் பூண்டையும் சுத்தம் செய்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளி மற்றும் புதினா, மல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசியை சுத்தம் செய்து, தண்ணீர் விட்டு ஊறவிடவும். மட்டனை தேவைகேற்ப நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு குக்கரில் கறியைப் போட்டு, அதனுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து வேகவைக்கவும். கறி வெந்தவுடன் அடுப்பு தீயைக் குறைத்துவிடவும்.
பின்பு வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் சிறிது போடவும்.
பிறகு ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும். வதங்கியபிறகு பச்சை மிளகாய், மல்லி, புதினா போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கறி மசாலா, தனியாத் தூள், மிளகாய்த்தூள் போட்டு வேக வைத்த கறியைக் கொட்டி எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.

ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து அடுப்பை குறைந்த தீயில் எரிய விடவும்.

ஒரு கிலோ அரிசி வேகும் அளவிற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாத்திரத்தின் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பை எரிய விடவும்.

தண்ணீர் கொதி வந்த உடன் கேசரிபவுடர், உப்பு சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை களைந்து கொதிக்கும் நீரில் போடவும்.

கஞ்சி இல்லாமல் சோற்றினை முக்கால் வேக்காட்டிற்கு வடித்துவிடவும். இந்த சோற்றுடன் வேக வைத்துள்ள கறி மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்பு மேலே ஒரு பேப்பரைப் போட்டு ஆவி வெளியேறாமல் மூடி விடவும்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து டால்டாவை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் எலுமிச்சை சாற்றையும் சோற்றில் கொட்டி நன்கு கிளறிவிட்டு இறக்கிவிடவும்.

Indian Cameras And Photo


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed