சமையல் / சிற்றுண்டி வகை

பிரெட் புட்டு

 (சைவம்)
தேவையானப் பொருட்கள் :

பிரெட் - 12
முந்திரி - 10
திராட்சை - 15
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
சீனி - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பிரெட்டின் ஓரத்தில் உள்ள பகுதியை வெட்டி எடுத்து விடவும். பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொலபொலவென்று பொடித்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

அதனுடன் பொடி செய்து வைத்திருக்கும் பிரட்டை போட்டு ஒன்றாக கிளறி விடவும்.

அதன் பின்னர் பிரெட்டுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பிறகு சீனியை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு உடனே இறக்கி விடவும். விருப்பட்டால் இறக்கும் பொழுது மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி இறக்கலாம். சீனி கரையும் முன் இறக்கி விட வேண்டும். இந்த பிரெட் புட்டு எளிதில் செய்ய கூடிய மாலை நேர சிற்றுண்டி.

Indian Crafts Classifieds


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 
Free qatarassets.com adsense Free mytiruvarur.com adsense Free malaysiaadz.com adsense
Free abudhabiadz.com adsense Free dubaiadz.com adsense Free abudhabiassets.com adsense
Free dubaiassets.com adsense Free indiaassets.com adsense Free sgclassify.com adsense
Free betamil.com adsense Free classifiedsense.com adsense Free chennaiclassify.com adsense