சமையல் / சிற்றுண்டி வகை

வெந்தயக்கீரை சப்பாத்தி

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையானப் பொருட்கள் :

கோதுமை மாவு - ஒரு கப்
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி தழை - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கெட்டித்தயிர் - ஒரு தேக்கரண்டி

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும்.

அதன் பின்னர் சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் வெந்தயக்கீரையை தண்ணீரில் அலசி விட்டு அதில் போட்டு பிரட்டி விடவும்.

பிறகு தனியா தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு ஒரு முறை வதக்கவும்.

அதனுடன் கொத்தமல்லி தழையை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து விடவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதில் வதக்கி வைத்திருக்கும் வெந்தயக்கீரை மசாலாவை போடவும்.

அதன் பின்னர் அதனுடன் வெண்ணெய், தயிர், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்க்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி அதில் செய்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு மேலே சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.

Chennai Cars


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed