சமையல் / சிற்றுண்டி வகை

பச்சரிசிமாவு ரொட்டி

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

பச்சரிசிமாவு - 2 கப்
சின்னவெங்காயம் - 1 கப்(பொடியாக நறுக்கியது)
காய்ந்தமிளகாய் வற்றல் - 3 எண்ணம் (சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்துவைக்கவும்)
தேங்காய் துருவல் - 3/4 கப்
கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

1.சின்ன வெங்காயம்,காய்ந்தவற்றல் மிளகாய் கொத்தமல்லி தழை இவற்றை மேலே கூறியதுப்போல் நறுக்கிக் கொள்ளவும்.
2.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் கடுகு, மற்றும் நறுக்கியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிவைக்கவும்.
3.ஒரு பாத்திரத்தில் பச்சரிசிமாவும்,தேங்காய் துருவல்,வதக்கியவற்றைப் போட்டு , உப்பும் போட்டு தண்ணீர் விட்டு பிசையவும்.
4.பிசைந்த மாவு கொஞ்சம் தண்ணீர் கோர்த்து இருக்கவும்.அதை பெரிய உருண்டை வடிவத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்துவைக்கவும்.
5.ஒரு வாழை இலை துண்டில் அல்லது பால்கவரிலோ எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கையினாலே ரொட்டியை தட்டி பரப்பவும்.
6.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பரப்பின ரொட்டியை பிரித்துப் கல்லில் போட்டு எண்ணெய்விட்டு மறுபக்கமும் திருப்பி போட்டு ரொட்டி வெந்தபின் எடுக்கவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ரொட்டியைச்சுடவும்.
7.காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.உருளைகிழங்கு குருமா குழம்பு வைத்து பரிமாறவும்


Chennai Finance


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed