சமையல் / சோறு வகை

எக் ஃபிரைடு ரைஸ்

 (அடியக்கமங்கலம், அசைவம்)
தேவையானப் பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 350 கிராம்
முட்டை - 2
கோஸ் - 1/2 கப்
கேரட் - 1/2 கப்
பீன்ஸ் - 5
குடை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1/2
ஸ்பிரிங் ஆனியன் - 1
பேபிகார்ன் - 5
ஆப்பிள் தக்காளி - 1/2
பச்சை மிளகாய் - 2
வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
மல்லி இலை - சிறிதளவு

கால் மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை ஒன்றுக்கு ஒன்றரை மடங்கு என தண்ணீர் ஊற்றி உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து, உதிரியாக ஆற வைக்கவும். கேரட்டை சற்று பெரிதாக துருவிக் கொள்ளவும். கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் சன்னமாக நறுக்கவும். பீன்ஸ், ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன், பச்சை மிளகாய் ஆகியவற்றை சன்னமாக(வட்டமாகவும்) நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நீட்டமாக நறுக்கவும். (தக்காளியை நறுக்கிய பிறகு உள்ளே இருக்கும் ஜூஸ் மற்றும் விதை பகுதியை நீக்கி விடவும்.)

வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி, சூடாக்கி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து துருவல் போல் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பீன்ஸை 1 நிமிடம் வதக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.

பிறகு ஸ்பிரிங் ஆனியன், பேபி கார்ன், கோஸ், கேரட் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். ஒவ்வொன்றையும் சிறிது நேரம் வதக்கி பின்னர் அடுத்த பொருளை சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.

அதன் பிறகு பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து ஒரு முறை வதக்கி அஜினோமோட்டோ, சோயா சாஸ் சேர்க்கவும்.

இறுதியாக மீதியுள்ள உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

இந்த கலவையை சாதத்துடன் கலந்து(அதிகம் கிளர வேண்டாம்) பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி மூடி வைத்து குறைவான தீயில் 3 அல்லது 4 நிமிடம் வைக்கவும். இதற்கு மூடியுடன் கூடிய பாத்திரமாக இருந்தால் நன்று. இல்லையென்றாலும் பரவாயில்லை.

இப்போது சுவையான வெஜிடபிள் எக் ஃபிரைடு ரைஸ் ரெடி. கெட்சப் அல்லது டொமெட்டொ சாஸுடன் பரிமாறவும். இதில் பொடியாக பிரித்து எடுத்த காலிபிளவர், வேக வைத்த பட்டாணி, பீட்ரூட் போன்றவையும் சேர்க்கலாம். பீட்ரூட் சேர்க்கும் போது சாதத்தின் நிறம் மாறிவிடும். பிடிக்காதவர்கள் சேர்க்காமல் செய்யலாம்.


London Collectibles


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed