சமையல் / கூட்டு வகை

சீனிஅவரைக்காய் பருப்புகூட்டு

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள் :

சீனிஅவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு - 1/2 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்)
சாம்பார்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1கீற்று
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

சீனிஅவரைக்காயையும், பருப்பையும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.

ஒருவாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சாம்பார்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்

வெந்த சீனிஅவரைக்காய் பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

நன்றாக கொதித்து தண்ணீர் வற்றி பருப்பு கூட்டு கட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.


Dubai Computers


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed