சமையல் / குழம்பு வகை

பலகாய்க் குழம்பு

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

மொச்சக்கொட்டை - 200 கிராம்
பறங்கிக்காய் - 250 கிராம்
கத்தரிக்காய் - 200 கிராம்
அவரைக்காய் - 200 கிராம்
தட்டப்பயத்தங்காய் - 200 கிராம்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
ப.மிளகாய் - 10
வரமிளகாய் - 10
பாசிப்பருப்பு - 200 கிராம்
மஞ்சள்த்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் (அ) வெண்ணைய் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு
கறிவேப்பில்லை , கொத்தமல்லி - சிறிது

காய்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கிகொள்ளவும்.

செய்முறை:

1. ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.
பருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் அனைத்து காய்களையும் போட்டு வேக விடவும். (காய்கள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் இருக்க வேண்டும்)

2. காய்களை போட்ட சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய், கறிவேப்பில்லை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

3. அனைத்து காய்களும் (குழம்பு கொஞ்சம் திக்கா இருக்கட்டும்) ஒரு சேர வெந்ததும் வெண்ணையை (எண்ணெய்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மிகவும் சுவையான பலகாய்குழம்பு தயார்.

Bangalore Party And Club


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed