சமையல் / காரம் வகை

ஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 3 கப்
அரிசி மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 5 தே கரண்டி (அ) தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
சோடாமாவு – சிட்டிகை அளவு
எண்ணை பொரித்தெடுக்க
முறுக்குக் குழாய், ரிப்பன் அச்சு

செய்முறை:

கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

தேவையான அளவு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

காய்ந்த எண்ணை ஊற்றி மேலும் இலகுவாக பிசையவும்.

(கடினமாக இல்லாமல் பிழிவதற்கு ஏற்றவாரு இலகுவாக இருக்க வேண்டும் அதேசமையம் பிசுபிசுப்பின்றி இருக்கவேண்டும்)

கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணையில் பிழிந்து பொரிக்கவும்.

செம்பொன்னிறமாக வந்ததும் எடுத்து ஆறவைத்துப் பரிமாறவும்.

Coimbatore Shoes


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed