சமையல் / இனிப்பு வகை

பப்பாளி பழ அல்வா (Papaya Halwa)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7

செய்முறை:

1.முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

2.பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.

3.அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.

4.பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.

5.பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.

6.அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.

7.பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.

8.பப்பாளி பழ அல்வா தயார்.

டிப்ஸ்:

பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்), பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.

Delhi Toys And Hobbies


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed