சமையல் / சிற்றுண்டி வகை

ரவா பொங்கல் (Rawa Pongal) 

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
முந்திரி – சிறிதளவு
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உப்பு தேவையான அளவு
நெய் தாளிக்க

செய்முறை:

நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.

பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.

அடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

சூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.

Bangalore Other Things


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed