சமையல் / இனிப்பு வகை

பச்சரிசி ஹல்வா (Rice Halwa)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு : 2 கப்
கடலை பருப்பு : 1 கப்
வெல்லம் : 11/2 கப்
நெய் : 1/2 கப்
முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு

செய்முறை:

அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் கடலைபருப்புடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். குழையக் கூடாது ஓரளவுக்கு திடமாக இருக்க வேண்டும்.

பருப்பு வெந்தவுடன் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்துவரும். (தண்ணீர் கையில் தொட்டு மாவை தொட்டுப் பார்த்தால் ஒட்டாது இருக்க வேண்டும் இதுதான் பதம்.)

வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். இந்த வெல்லத்தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும்.

முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறினதும் பரிமாறவும்.

Singapore Training


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed