சமையல் / காரம் வகை

முறுக்கு (Murukku)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு : 2 கப்
பொட்டுக்கடலை மாவு : 1 கப் (பொட்டுக்கடலையை மிக்சியில் அரைத்து சலித்துக்கொள்ளவும்)
சீரகம்: 2 தேக்கரண்டி
எள்ளு: 2 தேக்கரண்டி
பெருங்காயம்: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணை: முறுக்கு சுட தேவையான அளவு

செய்முறை:

அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம், எள்ளு, பெருங்காயம், உப்பு ஆகிய அனைத்தயும் ஒன்றாக கலந்து அதில் கொஞ்சம் சூடான நீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். (மாவு இலகுவாக இருக்க வேண்டும் கடினமாகவோ/அதிகம் தண்ணீரோ இருக்க கூடாது)

கடாயில் எண்ணையை ஊற்றி சூடானவுடன் அதிலிருந்து 5/6 தேக்கரண்டி எடுத்து மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

உங்கள் விருப்பப்படி முறுக்கு குழாயில் மாவு போட்டு பிழிந்து பொன்நிறமாக சுட்டு எடுக்கவும்.

American Shoes


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed