சமையல் / குழம்பு வகை

பருப்பு ரசம் (Daal Rasam)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – அரை கப்
சிறிய வெங்காயம் – 5
பூண்டு – 1
தக்காளி - 1
மிளகு பொடி – ½ டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ½ டீ ஸ்பூன்
சீரகம் பொடி - ½ டீ ஸ்பூன்
புளி, எண்ணெய், கறிவேப்பிலை தேவையான அளவு

செய்முறை:

தண்ணீர் விட்டு பருப்பை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளியைக் கரைத்து அதில் விடவும்.

தக்காளியை பிசைந்து அதில் விடவும்.

மிளகு, சீரகம், மஞ்சளையும் கரைத்துவிடவும்.

பின்னர் வானலியில், கரிவேப்பிலை, பூண்டு, மற்றும் நருக்கி வைத்த வெங்காயத்தையும் விட்டு தாளித்து பருப்பு புளி கரைசலில் கொட்டி விடவும்.

பின்னர் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

குறிப்பு: இதை சைவப் பிரியர்கள் சாப்பாட்டுடன் உருளைக்கிழங்கு வருவலுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அசைவப் பிரியர்கள் நித்திலி கருவாட்டுடன் சாப்பிட்டால் அதிகம் சாப்பிடலாம்.

நன்றி: நிஹார்

London Jobs


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed