சமையல் / குழம்பு வகை

மாம்பழ கார குழம்பு

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழம் - ஒன்று
புளி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்

எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:

வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.

வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.

புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.

தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.

எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

Delhi Travel And Tour


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed