சமையல் / சோறு வகை

ஆம்பூர் மட்டன் பிரியாணி

 (அடியக்கமங்கலம், அசைவம்)
தேவையான பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ
பாசுமதி அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 6
தக்காளி - 6
பச்சை மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 10
ஏலக்காய் - 15
அன்னாசி மொக்கு - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
எலுமிச்சை - 1
புதினா - 1 கப்
கொத்தமல்லி - 1 கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
ரம்பை இலை
கலர் பொடி

செய்முறை:

அரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். அதில் தயிர் பாதி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் கிளறி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும். புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும்.

இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.

பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும். சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.

Hyderabad Electronics


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed