சமையல் / இனிப்பு வகை

சோமாஸ் (Somas)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கிலோ
ரவை - 1/2 கிலோ
வெல்லம் - 1/4 கிலோ ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
எண்ணெய் - 1/2 லிட்டர்
பொட்டுக்கடலை - 100 கிராம்
நிலக்கடலை - 100 கிராம்

செய்முறை:

நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது உள்ளடம் தயார்.

அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் 1 முதல் 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள உள்ளடம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும்.

பின்னர் கடையில் விற்கும் நெளி தேக்கரண்டியையோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி ஓரங்களை அழகு பட வெட்டலாம் அல்லது கத்தி கொண்டு ஒரே சீராக ஓரங்களை வெட்டிக் கொள்ளலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் ஒட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து சாப்பிடலாம்.

உள்ளடம் மிகுதியாகிவிட்டால் லேசாக தண்ணீர் தெளித்து உருண்டை பிடித்து நிலக்கடலை உருண்டையாகவும் செய்து கொள்ளலாம்.

ஏலக்காய் பொடி செய்யும் போது 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடி செய்தால் சுவையாக இருக்கும்.

Chennai Movies


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed