சமையல் / இனிப்பு வகை

சோள மாவு அல்வா (Corn Flour Halwa)

 (சைவம்)
தேவையான பொருட்கள்:

பால் - 3 கோப்பை
சோளமாவு - ஒரு கோப்பை
சர்க்கரை - 2 கோப்பை
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
கேசரி கலர் - 2 சிட்டிகை
நெய் - 100 கிராம்
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை


செய்முறை:

ஒரு அகன்ற பாத்திரத்தில் பால், சர்க்கரை, சோளமாவு சேர்த்து நன்றாக கட்டி விழாமல் கலக்கவும். அதனுடன் கேசரி கலர் சேர்த்து கலக்கவும்.

முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு தனியே பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சோளமாவுக் கலவையைக் கொட்டி அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும்.

கலவை திரண்டு கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும்.

பின்னர் இக்கலவையுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

ஊற்றிய நெய் மேலே திரண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை அதில் கொட்டி, நன்றாக ஆறியபின் வேண்டிய வடிவில் துண்டுகளாக்கி சுவைக்கலாம்.

Indian Clothing Classifieds


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 
Free qatarassets.com adsense Free abudhabiassets.com adsense Free mytiruvarur.com adsense
Free malaysiaadz.com adsense Free dubaiassets.com adsense Free sgclassify.com adsense
Free betamil.com adsense Free chennaiclassify.com adsense Free dubaiadz.com adsense
Free abudhabiadz.com adsense Free classifiedsense.com adsense Free indiaassets.com adsense