சமையல் / இனிப்பு வகை

கேரட் அல்வா (Carrot Halwa)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

கேரட் - 4
கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி (மில்க் மைடு)
பால் - 2 மேஜைக் கரண்டி
சர்க்கரை - 2 கோப்பை
வறுத்த முந்திரி - 10
ஏலக்காய் - 4
நெய் - 1/2 கப்

செய்முறை:

கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.

துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.

நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும். பின்னர் மிதமான சூட்டிலோ அல்லது ஆறியப்பின்னரோ சுவைத்தால் நன்றாக இருக்கும்.


Dubai Cars


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed