சமையல் / இனிப்பு வகை

அரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)

 (அடியக்கமங்கலம், சைவம்)
தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 3/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
நெய் - 50 கிராம்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
முந்திரி - 10
உப்பு - சிறிதளவு

செய்முறை:

அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

இதில் உப்பு கலந்த தண்ணீர் விட்டு பிசறிக் கொள்ளவும்.

பின்னர் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும்.

இந்த கலவை சூடாக இருக்கும் போதே சர்க்கரையையும், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கி தட்டில் வைத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை:

உப்பு நீரில் அரிசி மாவை பிசையும் போது கட்டி தட்டாமல் பார்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் துருவல் செய்த தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றி: நிஹார், அடியக்கமங்கலம்

Coimbatore Tickets


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 


Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed