RSS Feed  

அஸ்பாரகஸ் தாவரத்தின் மருத்துவ குணங்கள்


Health benefits of Asparagus
அடியக்கமங்கலம், 06.01.2014: அஸ்பாரகஸ் என்ற பூண்டுத்தாவரம் நீண்டகாலம் வாழும் சிறப்புடையது. இந்த தாவரம் உயரமாகவும் தடித்த லாரிஸா தண்டுகள் கொண்டு, அதிகமான கிளைகளுடன் மென்மையான இலைக்கொத்துகளுடன் காணப்படும். இதனுடைய பூக்கள் மணியின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது பச்சை கலந்த வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். இந்த பூக்கள் தனியாகவோ அல்லது கொத்தாக இரண்டிலிருந்து மூன்றாகவோ கிளைகள் சேரும் இடங்களில் பூக்கும். இது ஒரு இருபால் தாவரமாகும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியான தாவரங்களில் பூக்கும். ஆனால் சில நேரங்களில் இருபாலினத்து உறுப்புக்களும் ஒரே பூவில் காணப்படும்.

இதில் காய்க்கும் பழம், மிகவும் சிறிய சிகப்பு ஸ்ட்ரா பெர்ரியை போன்று 6 முதல் 10 மில்லி மீட்டர் விட்டமுடையதாக இருக்கும். இந்த தாவரம் ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா மற்றும் மேற்கத்திய ஆசியா போன்ற நாடுகளை இருப்பிடமாகக் கொண்டது. இப்போது இது காய்கறி பயிராகவும் அதிகமான இடங்களில் பயிரிடப்படுகிறது.

கடல்சார்ந்த பகுதிகளில் தான் அஸ்பாரகஸ் அதிகமாக வளரும் தன்மையுடையதாக இருக்கிறது. ஏனெனில், அஸ்பாரகஸ் விளையும் நிலம் மிகவும் உப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும். இதில் கொழுப்புச் சத்து இல்லை, குறைந்த அளவில் கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் ஆரோக்கியமான உணவு என்றும் கூறலாம். போலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை வெள்ளைத் தங்கம் என்றும் அழைப்பார்கள், வெள்ளை அஸ்பாரகசை விட பச்சை அஸ்பாரகசில் வைட்டமின் C அதிகம் உள்ளது.

அஸ்பாரகஸில் உள்ள சத்துப்பொருள், சிறுநீர்ப்பெருக்கியாக செயல்புரிகிறது, நம்மை சோர்வுப்படுத்தும் அம்மோனியாவை நடுநிலைப்படுத்துகிறது. சிறிய இரத்த குழல்களில் சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது, அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியது. ஏனெனில் இதில் போலேட் மற்றும் வைட்டமின் C ஆகியவைகள் நிறைந்து காணப்படுகிறது.

இதய நோய் உருவாவதற்கு காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டைனை போலேட் கட்டுப்படுத்துகிறது. போலேட் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் போலேட் குழந்தைகளின் நரம்பு சார்ந்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிகமான பொட்டாசியம் எடுத்துக்கொள்வதனால் உடலில் உள்ள கால்சியம் இழப்பு குறைக்கப்படுகிறது.

Abu Dhabi Party And Club




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed