RSS Feed  

துளசி எண்ணெய் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும்


Basil oil stops breast cancer
அடியக்கமங்கலம், 20.01.2014: மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை இந்தியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் குறித்து வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யை புற்நோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவி சோதனை செய்யப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி எண்ணெய் தடவப்பட்ட இடத்தில் புற்றுநோய் பரப்பும் செல்கள் வளர்ச்சி நின்றுபோனது. இந்தப் பரிசோதனையின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி மருத்துவ குணம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற செடிகளை நேரடியாக மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டும் என்றில்லாமல் நோய் தீர்க்கும் சத்து பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Singapore Other Things




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed