RSS Feed  

ஆறாம் அறிவு என்பது கிடையாது - ஆய்வறிக்கை


Researchers dismiss sixth sense
அடியக்கமங்கலம், 21.01.2014: பொதுவாக மனிதனையும் மற்ற உயிரினங்களையும் வித்தியாசப்படுத்துவது ஆறாம் அறிவு என்ற ஒன்று தான். உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள மனோதத்துவ ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி பியர்ஸ் ஹாவ் கூறுகையில், ஒரு பெண்ணின் இரு புகைப்படங்களை சிலரிடம் கொடுத்து அதில் உள்ள மாற்றத்தை கேட்டபோது அவர்களால் மாற்றம் இருப்பதை கூற முடிந்ததே தவிர, என்ன மாற்றம் உள்ளது என்பதை உணர முடியவில்லை. இதில் இருந்து, பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணம் மற்றும் தொடுதல் என்ற ஐந்து அறிவுகளுடன், மூளையின் சிந்திக்கும் திறனின்றி துல்லியமாக மாற்றத்தைக் கூற முடியாது. இதனை ஆறாவது அறிவு என்று சிலர் கூறுகின்றனர். ஐந்து அறிவுகளின் உதவியில்லாமல், ஆறாவது அறிவு என ஒன்று தனியாக செயல்பட முடியாது. எனவே, ஐந்து அறிவுகள் தான் உள்ளன என்று தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போன்ற கருத்தை தெரிவித்துள்ள பியர்சின் ஆய்வு குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

Delhi Collectibles




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed