RSS Feed  

கோரைக்கிழங்கின் மருத்துவ பலன்கள்


Health benefits of Korai Kizhangu
அடியக்கமங்கலம், 22.01.2014: வயல் வெளிகளில் எளிதாகக் கிடைக்கக்கூடியது கோரைக்கிழங்கு. உலர்ந்த கோரைக் கிழங்கை நாட்டு மருந்துக் கடைகளில் முத்துக்காசு என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். உலர்ந்த கோரைக்கிழங்கு மருந்துப் பொருளாக மட்டுமின்றி ஊதுவத்தி போன்ற நறுமணப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் மருந்தாக பயன்படுகிறது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது.

குன்ம நோயை குணமாக்க இரண்டு பச்சை கோரைக்கிழங்கை எடுத்து நறுக்கி நூறு மில்லி நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்தக் குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் முன்று வேளை என்ற கணக்கில் இருபது நாட்கள் சாப்பிட்டால் கடுமையான குன்ம வயிற்றுவலி குணமாகும். குடிநீரை சாப்பிட்டால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவையும் குணமாகும்.

குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொண்டு ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கிவிடும். இந்த மருந்தை சாப்பிடும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண்டும். இதே முறையில் உணவு சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். தாய்பால் குறைப்பாடு உள்ளவர்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக தடவினால் பால் நன்றாக சுரக்கும்.

Abu Dhabi Cameras And Photo




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed