RSS Feed  

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீன்ஸ்


Beans rich in nutrients
அடியக்கமங்கலம், 24.01.2014: விலை மலிவாக கிடைக்கும் பீன்ஸில் நிறைய நன்மைகள் உள்ளன. நீரிழிவை கட்டுப்படுத்தும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால், அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும். வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

பீன்ஸில் போலேட் என்னும் கருவில் வளரும் சிசுவிற்கு தேவையான வைட்டமின் இருப்பதால், கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது நல்லது. பீன்ஸில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் தடுக்கும். கொழுப்பு குறைவாக உள்ள பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் வளமாக இருப்பதால், இது உடல் எடையை குறைக்கவும், சீராக பராமரிக்கவும் உதவும். எப்படியெனில் இதனை சாப்பிடுவதால், இதில் உள்ள புரோட்டீன், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். மேலும் பீன்ஸ் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக்கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம். பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து, எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட, இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.

பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகளான லுடீன், நியோசாந்தைன், பீட்டா கரோட்டீன் மற்றும் வியோலாசாந்தைன், சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும். உடலில் பயோடின் குறைபாடு இருந்தால் தான், முடி உடைய ஆரம்பிக்கும். இத்தகைய பயோடின் பீன்ஸில் உள்ளதால், இதனை உட்கொண்டால், முடி உடைவதைத் தடுக்கலாம்.

Mumbai Tickets




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed