RSS Feed  

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்


Health benefits of turkey berry
அடியக்கமங்கலம், 16.02.2014: சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வந்தால் மார்புச் சளி, ஆஸ்துமா, மற்றும் காச நோய் ஆகியவை குணமாகும். வயிற்றுப் போக்கும் நின்றுவிடும். சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வந்தால் பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் பசி மந்தம், சுவையின்மை, மூலம் ஆகியவை குணமாகும். சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வந்தால் நீரிழிவு நோய் தணியும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும். சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர்ந்தால் இழுப்பு நோய் தணியும். சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடித்தால் வலிகாய்ச்சல் குணமாகும்.

Mumbai Entertainment




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed