RSS Feed  

செம்பருத்தி பூக்கள் இதய நோயை தடுக்கும்


Hibiscus protects heart
அடியக்கமங்கலம், 17.02.2014: செம்பருத்தி பூக்களை சேகரித்து நிழலில் வைத்து மொறு மொறுவென காய்ந்ததும் மிக்சியில் இட்டு அரைத்து தூளாக்கி சலித்து கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் பசும் பாலில் விட்டு காய்ச்சி தினமும் ஒருவேளை அருந்தி வந்தால் தாது புஷ்டி ஏற்படும். உடலில் மினுமினுப்பு ஏற்படும். ஒரு டம்ளர் செம்பருத்தி தூளை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தினமும் அருந்தினால் இதய நோய் உங்களை நெருங்கவே நெருங்காது.

செம்பருத்தி மலர்கள் 25 எடுத்து மர உலக்கையால் இடித்து சாறெடுத்து அதற்கு சம அளவு நல்லெண்ணை சேர்த்து நன்கு காய்ச்சி, சிவப்பு நிறம் இறங்கி தைலப்பதம் வந்ததும் வடிகட்டி ஆறவிட்டு எடுத்து வைக்க வேண்டும். இந்த தைலத்தை கூந்தலுக்கு பூசி வந்தால், கூந்தல் கருமையாக செழித்து வளருவது மட்டுமல்லாமல் இளநரை கூட மாறிவிடும். தண்ணீரை காய்ச்சி குடிப்பது தான் சுகாதாரம், செம்பருத்தி பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண் எரிச்சல் இருக்காது.

ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி தூள் ஒரு தேக்கரண்டி தேன், தேக்கரண்டி ரோஜா இதழின் பொடி சேர்த்து 48 நாட்கள் அருந்தி வந்தால் மாத விடாய் கோளாறுகள் குணமாகும். குறிப்பாக வெள்ளைப்பாடும், அதிக உதிரப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும். கிராமப்புறங்களில் சிறுமிகள் பூப்படைந்ததும், செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட தருவார்கள். இதனால் அவர்களுடைய கருப்பை சம்பந்தப்பட்ட உறுப்புகள் பலம் பெறுவதோடு நல்ல வனப்பும் பெற்று அழகோடு மிளிர்வார்கள்.

செம்பருத்தி வேரை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி செம்பருத்தி வேர் பொடியும் 2 ஆடு தொடா இலைகளை சேர்த்து குடிநீரில் காய்ச்சி வடிகட்டி அருந்த இருமல் பறந்துவிடும். தோட்டத்து பக்கம் போக நேரும் போதெல்லாம், ஒரு செம்பருத்தி பூவையோ, மொட்டையோ பறித்து மென்று சாப்பிட்டு விடுங்கள் இரும்பு டானிக் சாப்பிட்ட அளவுக்கு சக்திக் கிடைக்கும்.

Mumbai Computers




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed