RSS Feed  

பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்த தர்பூசணி


Potassium and fiber rich in watermelon
அடியக்கமங்கலம், 20.02.2014: தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் இரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியும். கட்டி, ஆஸ்துமா, தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், மற்றும் கீல்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. இது உடல் நலத்திற்கு ஊட்டச்சத்து வழங்க கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம்.

100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% உள்ளது. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. உடலிற்கு தேவையாக இன்சூலினையும் மேம்படுத்தும். தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரகூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

Indian Training




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed