RSS Feed  

வயதான தோற்றத்தை நீக்கும் பிளம்ஸ் பழம்


Plums clear aged appearance
அடியக்கமங்கலம், 21.03.2014: மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பிளம்ஸ் பழம் நல்ல சிவப்பாக அல்லது கருஞ்சிவப்பாக இருக்கும் இந்த பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும். சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.

ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்தத்தை சுத்திகரிக்க பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவு நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது. இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம். பிளம்ஸ் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம்.

Dubai Computers




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed