RSS Feed  

காய்ச்சல் ஒரு அறிகுறி தான் நோயல்ல


Fever is a symptom not disease
அடியக்கமங்கலம், 24.03.2014: காய்ச்சலின் அடையாளங்களாக உடம்பு நெருப்பாய் கொதிக்கும், நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்காது, உடல் பாரம், உடல் வலி, அமைதியின்மை, அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும், ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 F (37 C).இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் அல்லது ஜுரம் என்கிறோம். இதனை அனுபவிக்காதவர்களே இல்லை என்னுமளவுக்கு சாதாரணமான விஷயம்.

காய்ச்சல் ஒரு நோயல்ல நமக்கு எதிரானதும் அல்ல மாறாக நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திகளை உருவாக்க போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது என்பது தான் உண்மை, அந்த நேரத்தில் மருத்துவர் உதவியுடன் நோயெதிர்ப்பு சக்திக் கொண்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலம் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் கட்டுப்படுத்த முடியும்.

Hyderabad Travel And Tour




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed