RSS Feed  

புரோத சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள்


Protein and nutrition enriched grams
அடியக்கமங்கலம், 28.03.2014: பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட்களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.

பயறு வகைகளில் பி-காம்பளக்ஸ், வைட்டமின் B1, B2, B3, B5, B6, B12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் D, E, C மற்றும் K, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.

பயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத்தையும், கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது. உதாரணமாக பாசிப் பயிறுகளை உணவில் அதிகளவில் சேர்க்கும்போது ரத்த சோகை, நரைமுடி ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கிறது. கர்ப்பிணிகள் அதிகளவில் பாசிப்பயறு சேர்த்துக் கொள்வது குழந்தைக்கும் சேர்த்து நல்லது.

முளைகட்டி அவற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து உட்கொள்ளலாம். முளைகட்டிய 25 கிராம் வெந்தயத்துடன் 5 சிறிய வெங்காயம், ஒரு கேரட் ஆகியவற்றை பொடி செய்து சேர்த்து உட்கொள்வது நல்லது. தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம். கொள்ளு ரசம் வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கொழுப்பு குறைந்து உடலில் சக்தி அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையை அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் வலிமை பெறும்.எள்ளுவை நன்றாக தோல் நீக்கி அவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து இடித்து சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வை குறைபாடுகள் முற்றிலும் அகலும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எள்ளு மிகவும் ஏற்ற மருந்தாகும்.

Manila Health And Beauty




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed